2 லிட்டர் தண்ணீரில் கால்நடைகளுக்கான பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் மண்ணில்லா திட்டம் : கன்னியாகுமரியில் அறிமுகம்

Apr 21 2017 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
இரண்டு லிட்டர் தண்ணீரில், கால்நடைகளுக்கான பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் மண்ணில்லா திட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, வேளாண்மைத்துறையில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, கால்நடைகளுக்கு பசுந்தீவனம் உற்பத்தி செய்ய புதிய திட்டம் ஒன்று, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்திற்குட்பட்ட வடகன்கரை பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பசுந்தீவன உற்பத்திக்கு மண் தேவையில்லை. முளைகட்டிய விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரப்பி, தினமும் பூவாளி அல்லது நீர்த்தெளிப்பான் மூலம் தொடர்ந்து 8 நாட்கள் தண்ணீர் தெளித்து வந்தால், 20 சென்டிமீட்டர் அளவில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ பசுந்தீவனம் உற்பத்தி செய்ய 70 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், இந்த புதிய முறை மூலம் 2 லிட்டர் தண்ணீரிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், கறவை மாடுகளின் பால் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ போனிக் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சஜ்ஜன்சிங் சவான் நேரில் ஆய்வு செய்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 19:30

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2862.00 Rs. 3061.00
மும்பை Rs. 2882.00 Rs. 3052.00
டெல்லி Rs. 2895.00 Rs. 3066.00
கொல்கத்தா Rs. 2895.00 Rs. 3063.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.00 Rs. 42000.00
மும்பை Rs. 42.00 Rs. 42000.00
டெல்லி Rs. 42.00 Rs. 42000.00
கொல்கத்தா Rs. 42.00 Rs. 42000.00