சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் - நஷ்டத்திற்கான காரணங்களை கண்டறிந்து ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Apr 27 2017 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலை நஷ்டமடைவதற்கான காரணங்களை கண்டறிந்து, ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களும், இப்பகுதி மக்களும் சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கடும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதையும் முதலமைச்சர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஆலையின் மூலம் சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் - மேலும், பல்வேறு சிறு நிறுவனங்களும் உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி வருகின்றன - சேலம் உருக்காலையை விரிவுப்படுத்த தமிழக அரசு 2 ஆயிரத்து 5 கோடி ரூபாய் திட்டத்தை அறிவித்துள்ளது - இந்த நிலையில், இந்த ஆலையை தனியாருக்கு ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிடுமாறு மத்திய உருக்குத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00