கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப்பதிவு : 4 பேர் கைது - எஞ்சிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

Apr 30 2017 10:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை சம்பவம் தொடர்பாக, உதகையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா, இச்சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, உதயகுமார், சத்தீசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார். தலைமறைவாக உள்ள இதர குற்றவாளிகளை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் திரு. முரளி ரம்பா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00