அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கோபுரத்தின் முழுவடிவ அரிய புகைப்படம் லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து கண்டுபிடிப்பு

May 29 2017 7:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கோபுரத்தின் முழுவடிவ அரிய புகைப்படம் லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொல்லியல் ஆர்வலர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் இரண்டாம் நிலை மொட்டை கோபுரத்தின் கற்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறையினரால் பெயர்த்தெடுக்கப்பட்டது. இந்த கற்களைக் கொண்டு கும்பகோணம் அருகே அணைக்கரையில் கீழணை கட்டப்பட்டது. இந்நிலையில், தஞ்சையை சேர்ந்த பிரபல கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், மாமன்னர் ராஜேந்திர சோழன் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்றார். அப்போது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் இரண்டாம் நிலை மொட்டை கோபுரத்தின் முழுவடிவ அரிய புகைப்படத்தை கண்டுபித்துள்ளார். தற்போது தஞ்சை திரும்பிய அவர் இந்த அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00