வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Jun 26 2017 8:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி வெயில் முடிந்த பிறகும் தமிழகத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை உட்பட பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்துவருகிறது. இதேபோல், வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்டம் பெரியாறில் 7 சென்டிமீட்டர் மழையும், வால்பாறை மற்றும் சின்னகல்லாறில் 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய அணைகள், பாசன குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் குளிர்ந்து காணப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00