திருச்சியில் நடைபெற்ற கண்சிகிச்சை முகாமில் ஏராளமான மக்கள் பங்கேற்பு - கண்தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை

Jun 26 2017 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில் கண்தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சிறப்பு கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இறந்த பின்னரும், உலகைக் காண ஒரே வழி கண்தானம்தான். இத்தகைய சிறப்புப் பெற்ற கண்தானத்தை வலியுறுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு இதுதொடர்பாக உள்ள மூடநம்பிக்கைகளை அகற்றும் வகையிலும் திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு அமைப்பு மற்றும் தனியார் கண் மருத்துவமனைகள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு முகாம் நடத்தின. அதன் ஒரு பகுதியாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் சிறப்பு கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில், 4 பிரபல கண் மருத்துவமனைகள் பங்கேற்று சிறந்த மருத்துவர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், மேல் சிகிச்சை பெறவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00