MBBS மற்றும் BDS படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பம் - அடுத்த மாதம் 8-ம்தேதி விண்ணப்பங்களை அளிக்க கடைசி நாள்

Jun 26 2017 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

MBBS மற்றும் BDS படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, நாளைமுதல், அடுத்த மாதம் 7-ம் தேதிவரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள 21 அரசு கல்லூரி மற்றும் ஒரு பல் மருத்துவக் கல்லூரிகளில் 2017-18-ம் ஆண்டு MBBS மற்றும் BDS படிப்புகளில் சேர, அரசு கல்லூரிகளில், நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப விநியோகம் ஞாயிற்றுக்கிழமை உட்பட காலை 10 மணி முதல், 5 மணிவரை நடைபெறும். அடுத்த மாதம் 7-ம் தேதிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க அடுத்த மாதம் 8-ம் தேதி கடைசி நாளாகும். www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்களையும், தகவல் தொகுப்பீடுகளையும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை நேரில் பெறவிரும்பும் மாணவர்கள் 500 ரூபாய் வரைவோலையை, ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து "The Secretary, Selection Committee, Kilpauk, Chennai-10" என்ற முகவரிக்கு எடுத்து அளித்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162 பெரியார் ஈ.வே.ரா. சாலை, கீழ்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கு, அடுத்த மாதம் 8-ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக தபால் மூலமோ அல்லது நேரிலேயோ சமர்ப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00