ராமநாதபுரம் மாவட்டம் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது : ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

Jun 26 2017 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை வேகத்தில் காற்று வீசி வருவதால், ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வந்த நிலையில், இன்று காற்றின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. மணிக்கு 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்து, டோக்கன் வழங்குவதை ரத்து செய்தது. இதனையடுத்து, இன்று ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதன் காரணமாக, ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் கரையோரமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00