ராமநாதபுரம் அருகே அடித்தளம் இல்லாத நகரும் வீடு கட்டி சாகுல் அமீது என்பவர் சாதனை

Jul 12 2017 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் அருகே அடித்தளம் இல்லாத நகரும் வீடு கட்டி சாகுல் அமீது என்பவர் சாதனை படைத்துள்ளார். அந்த வீட்டை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ராமநாதபுரம் அருகே திருபுல்லாணியை அடுத்த மேலப்புதுக்குடியைச் சோந்த சாகுல்அமீது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 6-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கட்டுமானப் பணி அனுபவங்களைக் கொண்டு வித்தியாசமான வீட்டை கட்ட திட்டமிட்டார். இவரது திட்டத்தைக் கேட்ட பலரும் நையாண்டி செய்தனர். சாகுல் அமீதுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். ஆனால், மனம் தளராத அவர், தனது முயற்சியை இடைவிடாமல் தொடர்ந்தார். நிலத்திற்கு அடியில் தூண்கள் அமைக்காமல், தரைத்தளம் அமைத்து அதற்குமேல், தூண்களை நிறுத்தி, 2 தளங்களுடன் கூடிய வீட்டை கட்டியுள்ளார். இந்த வீட்டை தேவைப்படும்போது, ரோலர் மூலம் அருகில் உள்ள பகுதிக்கு நகர்த்திச் செல்ல முடியும் என சாகுல்அமீது கூறுகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நகரும் வீட்டில் சாகுல் அமீது வசித்து வருகிறார். கட்டட வடிவமைப்பு, தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள பொறியியல் மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00