கழக அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து R.B. உதயகுமார் விடுவிப்பு: கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலோடு, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு- சில நிர்வாகிகளை நியமனம் செய்தும், ஒருசில நிர்வாகிகளை பொறுப்புகளில் இருந்து விடுவித்தும் அறிவிப்பு

Aug 23 2017 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலுடன், அ.இ.அ.தி.மு.க. அம்மா துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று, பல்வேறு நிர்வாகிகளை விடுவித்தும், புதிய நிர்வாகிகளை நியமித்தும், முக்‍கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலுடன், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பில் உள்ள திரு.R.B.உதயகுமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்‍கப்பட்டு, அவருக்‍கு பதிலாக திரு. எஸ்.மாரியப்பன்கென்னடி எம்.எல்.ஏ., நியமிக்‍கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்புக்‍கு தஞ்சை வடக்‍கு மாவட்ட கழகச்​ செயலாளர் திரு.M.ரெங்கசாமி எம்.எல்.ஏ., இன்று முதல் நியமிக்‍கப்படுகிறார்.

மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து திரு.V.V.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., விடுவிக்‍கப்பட்டு, அவருக்‍கு பதிலாக மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., திரு.இ.மகேந்திரன் நியமிக்‍கப்படுகிறார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் திரு.மா.சேகர் இன்றுமுதல் நியமிக்‍கப்படுகிறார்.

விருதுநகர் மாவட்ட கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்து திரு.M.S.R. ராஜவர்மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து திரு.N.அழகர்சாமி ஆகியோர் விடுவிக்‍கப்படுகின்றனர். திரு.M.S.R. ராஜவர்மன், அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார்.

விருதுநகர் மாவட்ட கழக பொருளாளராக திரு.T.முத்தையா நியமிக்‍கப்படுகிறார்.

விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளராக திரு.C.சுப்பிரமணியம், மாவட்ட இணைச் செயலாளராக திரு.N.அழகர்சாமி நியமிக்‍கப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளராக திரு.K.விவேகானந்தன் நியமிக்‍கப்படுகிறார்.

விருதுநகர் மாவட்ட கழக மகளிர் அணி மாவட்டச் செயலாளராக திருமதி கவிதா தனசேகரன், மாவட்ட இணைச் செயலாளராக திருமதி M.சொர்ணம் ஆகியோர் நியமிக்‍கப்படுகின்றனர்.

புதிய நிர்வாகிகளுக்‍கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. அம்மா துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00