கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், புதிதாக நியமிக்‍கப்பட்ட கழக நிர்வாகிகள் சந்திப்பு: பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும் நேரில் சந்தித்து ஆதரவு

Aug 23 2017 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

"அ.இ.அ.தி.மு.க. அம்மா" பொதுச் செயலாளர் சின்னம்மா வழிகாட்டுதலின்படி செயல்படும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்கி, மறைந்த மாண்புமிகு அம்மா உருவாக்கி தந்த ஆட்சியை அகற்ற முனைந்து, கழகத்திற்கு துரோகம் இழைத்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து கொண்டு, சுயலாபத்திற்காகவும், வணிக ரீதியாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நடத்திய இணைப்பு நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்து, சென்னையில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் இல்லத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் திரளாக வருகை தந்து, அவரை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், தஞ்சை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. மா.சேகர்-

மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உசிலம்பட்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மகேந்திரன் ஆகியோர், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை நேரில் சந்தித்து, தங்களது நியமனங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இதே போன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை, மதுரை, தேனி, வேலூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை நேரில் சந்தித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00