மாவட்டக் கழகச் செயலாளர்கள் விடுவிப்பு - புதிய பொறுப்பாளர்களை நியமித்து, கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா ஒப்புதலுடன், கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு

Aug 23 2017 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேலூர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. கே.சி. வீரமணி, கரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர், திருவாரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. R. காமராஜ், தென்சென்னை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. விருகை வி.என். ரவி உள்ளிட்டோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்‍கப்படுவதாக, கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா ஒப்புதலுடன், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று முக்‍கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் திரு. எஸ்.ஆறுமுகம் விடுவிக்‍கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக, காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளராக திரு. கோதண்டபாணி எம்.எல்.ஏ. நியமிக்‍கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து சிறுணியம் திரு. பலராமன் நீக்கப்பட்டு, திருவள்ளூர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளராக திரு. T.A. ஏழுமலை எம்.எல்.ஏ. நியமிக்‍கப்பட்டுள்ளார்.

வேலூர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து திரு. கே.சி. வீரமணி நீக்கம் செய்யப்பட்டு, வேலூர் மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளராக திரு. ஆர். பாலசுப்ரமணி எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் விடுவிக்‍கப்பட்டு, கரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளராக திரு. வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. நியமிக்‍கப்பட்டுள்ளார்.

தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து திரு. விருகை வி.என். ரவி விடுவிக்‍கப்பட்டு, தென்சென்னை தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளராக திரு. ஜி. செந்தமிழன் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

விவசாயப்பிரிவுச் செயலாளரும், புதுக்கோட்டை மாவட்டக்‍ கழகச் செயலாளருமான திரு. வைரமுத்து பொறுப்புகளில் இருந்து விடுவிக்‍கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டக்‍ கழகச் செயலாளராக திரு. பரணி E.A. கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து திரு. R. காமராஜ் விடுவிக்‍கப்பட்டு, திருவாரூர் மாவட்டக்‍ கழகச் செயலாளராக திரு. S. காமராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கழக அமைப்புச் செயலாளர்களாக திருவான்மியூர் திரு. எஸ். முருகன், குடவாசல் திரு. என். ராஜேந்திரன், கல்லூர் திரு. E. வேலாயுதம், கழக விவசாயப்பிரிவு செயலாளராக திரு. துரை கோவிந்தராஜ் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாகவும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து சுதா K. பரமசிவன் விடுவிக்‍கப்பட்டுள்ளதாகவும், கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா ஒப்புதலுடன், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00