ஒரே நிமிடத்தில் 5,366 நாற்றுகளை நட்டு கின்னஸ் சாதனை - சீனாவின் சாதனையை முறியடித்தனர் தமிழக மாணவ-மாணவிகள்

Aug 30 2017 8:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு ஒரே நிமிடத்தில் 5,366 நாற்றுகளை நட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.

பாரம்பரிய விதைகளின் முக்கியத்துவம் மற்றும் இயற்கை விவசாய முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டம் ஆவணிப்பூர் கிராமத்தல் 'நானும் ஒரு விவசாயி' என்னும் தலைப்பில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2,683 கல்லூரி மாணவ-மாணவிகள் இணைந்து சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில், 5,366 நாட்டு கத்தரிக்காய் நாற்றுகளை ஒரு நிமிடத்திற்குள் நட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.

இதற்கு முன்னர் சீனாவில் 2,017 பேர் கலந்துகொண்டு நாற்று நட்டு கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தனர். தற்போது இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. விளை நிலங்களில் இறங்கி நாற்று நட்டு தாங்களும் ஒரு விவசாயியாக மாறியதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00