அரசு நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி பங்கேற் வைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசு பதில் அளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 24 2017 12:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளை பங்கேற்ற வைக்‍கக்‍கூடாது என தொடரப்பட்ட வழக்‍கில், தமிழக அரசு பதிலளிக்‍க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வி சாராத அரசியல் பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி, கலந்துகொள்ள வைக்‍கிறார்கள். மாலையில் நடக்‍கும் நிகழ்ச்சிகளுக்‍கு காலையிலிருந்தே மாணவ, மாணவிகள் அரங்கத்தில் காத்திருக்‍கிறார்கள். அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால், மாணவிகள் அதிக அளவில் பாதிக்‍கப்படுகின்றனர். எனவே, கல்வி சாராத பொது நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கலந்துகொள்ள வைப்பதை தடுக்‍க வேண்டும் என வழக்‍கறிஞர் சூரியப்பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்‍கு நீதிபதி திரு. கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்‍கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தின்போது, பள்ளிக்‍கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வலுக்‍கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் கண்டிக்‍கத்தக்‍கது என நீதிபதி குறிப்பிட்டார். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்‍கவேண்டும் என குறிப்பிட்ட நீதிபதி திரு. கிருபாகரன், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கை என்ன என்பது குறித்து வரும் 6-ம் தேதி அரசு பதில் அளிக்‍க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00