வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சுமார் 4 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன : பொதுமக்கள் பார்வைக்காக திறப்பு

Oct 16 2017 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, சுமார் 4 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ள நிலையில், பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே பெரிய சரணாலயம் என்ற சிறப்பைப் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கும். கூழைக்கடா, நத்தைகொத்தி நாரை, பாம்புத்தாரா, பெலிக்கான் உள்பட, மொத்தம் 26 வகையான வெளிநாட்டுப் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகின்றன.

இந்த ஆண்டும், வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டுப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. இதுவரை 4 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் சுமார் 30 ஆயிரம் பறவைகள் வரை இங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேடந்தாங்கல் ஏரியிலும் போதிய அளவு நீர் இருப்பதால், வழக்கம்போலவே இந்த ஆண்டும் சீசன் களைகட்டும்.

தற்போது, குறைந்த அளவே பறவைகள் வந்திருந்தாலும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை இன்று திறக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகையை முன்னிட்டு, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் தொலைவில் உள்ள பறவைகளைக் கண்டு ரசிக்க பைனாகுலர் வசதி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00