குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கிடைக்காமல் செய்துவரும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மாதர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Oct 16 2017 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கி வரும் அத்தியாவசிய பொருட்களை கிடைக்காமல் செய்துவரும் மத்திய மாநில அரசுகளைக்‍ கண்டித்து நாகர்கோவிலில் மாதர் சங்கங்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உலக வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்ட மாதர் சங்கங்கள் சார்பில், இத்தினத்தை முன்னிட்டு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெண்கள், இந்தியாவில் வாழும் 36 கோடிக்‍கும் மேற்பட்ட மக்கள் மூன்று வேளை உணவு கிடைக்காமல் வாழ்வதாக ரெங்கராஜன் குழு அறிக்கை தெரிவித்துள்ளது என்றும், ஆண்டிற்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்வதாக அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன என்றும் குற்றம் சாட்டினர். இந்நிலையில், மத்தியஅரசு மாநிலங்களுக்‍கு வழங்கிவந்த உணவு தானியங்களைக்‍ குறைத்து அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைகளுக்‍கு கிடைக்‍காமல் செய்துவருவதாகவும், ஏழைகள் வாங்கும் பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரியைக்‍ கைவிட வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர். கோரிக்‍கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00