மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Oct 17 2017 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட மேற்கு திசை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், ஸ்ரீ்பெரும்பதூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெப்ப தணிந்து குளுமையான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர், வாலிகண்டபுரம், ஆலத்தூர், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பெரும்பாலான ஏரிகளின் நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பரபவலாக மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00