கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா எண்ணப்படி, கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பினைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில், டெங்குவை தடுக்கும் நடவடிக்கையாக, நில வேம்பு கஷாயம் வழங்கல் - பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

Oct 17 2017 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழியில் செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, டெங்கு நோயைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட, நகர, பகுதி, ஒன்றிய மற்றும் கிளைக்கழகங்கள் சார்பில், கழகத் தொண்டர்கள் சிறப்பு முகாம்கள் அமைத்து மக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழியில் செயல்படும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், பல்லாவரம் நகரக் கழகம் சார்பில், பல்லாவரம் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் மற்றும் டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை, கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. கரிகாலன் உள்ளிட்டோர் வழங்கினர்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக்கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை சார்பில், ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூர் பி.வி. நகரில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிப் பருகினர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகம் சார்பில், விக்கிரவாண்டி ஒன்றியம், வாக்கூரில், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோருக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.பாலசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் திரு.கணபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியக் கழகம் சார்பில், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் மற்றும் பப்பாளிச் சாறு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நிலவேம்பு குடிநீர் மற்றும் பப்பாளிச் சாறை ஆர்வமுடன் பருகினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00