தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்‍கு காரணமாக தமிழகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் - தொடரும் உயிரிழப்புகளால் பொதுமக்‍கள் பீதி

Oct 22 2017 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்‍கு காரணமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 70-க்‍கும் மேற்பட்டோர் டெங்குவால் பலியாகியுள்ள நிலையில், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவர் நவீன்குமார், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் தொடரும் டெங்கு உயிரிழப்புகளால் பொதுமக்‍கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அடுத்த மாராடி கிராமத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவி கோகிலா, டெங்கு காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டு, கடந்த 4 தினங்களுக்‍கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டார். மேல்சிகிச்சைக்‍காக திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, கோகிலா இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனை நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்‍காததே, தங்கள் மகள் உயிரிழக்‍க நேரிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். பள்ளி மாணவி பலியான சம்பவம், உப்பிலியாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்‍கு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகள் அனுசுயா, டெங்கு காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டிருந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், திருவாரூர் மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி அனுசுயா இன்று காலை உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்‍குடி நேருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன் சிவகுரு, கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தான்.

தருமபுரி அடுத்த ராஜாதோப்பு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என்ற 3 வயது சிறுவன் காய்ச்சலால் பாதிக்‍கப்பட்டு கடந்த வெள்ளிக்‍கிழமை தருமபுரி அரசு மருத்துவக்‍கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக சேர்க்‍கப்பட்டான். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தான்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00