கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழியில் பணியாற்றி வரும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு - கழக பணிகள் குறித்து ஆலோசனை

Oct 23 2017 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் சின்னம்மாவின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வரும் கழக துணைப் பொது செயலாளர் திரு. டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சந்தித்து கழக பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

கழக பொதுச் செயலாளர் சின்னம்மாவின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வரும் கழக துணைப் பொது செயலாளர் திரு. டிடிவி தினகரன், நாள்தோறும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து கழகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில், விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.டி. கலைச்செல்வன் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு கிருஸ்துவ வன்னியர் சங்க தலைவர் திரு. இருதயசாமி, துணைத் தலைவர் திரு. பீட்டர் உள்ளிட்ட நிர்வாகிகள் கழக துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். திரு. வி.டி. கலைச்செல்வன் அப்போது உடனிருந்தார்.

இந்திய குடியரசு கட்சி கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. இராம. சிவகுமார் தலைமையில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்து கொண்டனர். அப்போது வி.டி. கலைசெல்வன் உடனிருந்தார்.

இதேபோல், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. சுப்ரமணி மற்றும் மாவட்ட கழக பொருளாளர் திரு. எஸ்.கே. இளங்கோவன் ஆகியோரும் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பு பேசினர்.

இதனிடையே, சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள மருதுபாண்டியரின் 216-வது குருபூஜையில் கலந்துகொள்ள வேண்டி, தமிழக தலைமை அகமுடையார் சங்கத் தலைவர் திரு.ஜி.செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00