கடைமடைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

Nov 24 2017 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடைமடைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகளும், பொதுமக்களும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாசனத்திற்காக கடந்த அக்டோபர் 2ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததால் இதுவரை பாசனத்திற்காக தண்ணீர் கடைமடை பகுதிவரை செல்லாமல் உள்ளது. இதனால் விவசாயம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டு உள்ளதாக அமைச்சர்களிடத்திலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினரிடத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும் பழைய கட்டளை வாய்கால், எட்டரை, போதாவூர், போசம்பட்டி, அல்லிதுறை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் புதிய கட்டளை வாய்க்கால், தலைமடை பகுதி புங்ககனூர், பஞ்சப்பூர் உள்ளிட்ட பகுதியிலுள்ள ஏரிகளில் தண்ணீர் வராததால் நாற்று நடமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

உடனடியாக கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிட கோரி அல்லித்துறை ஊராட்சியிலுள்ள பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் என 200க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கறுப்பு கொடிகளை கட்டியும், கறுப்பு பேஜ் அணிந்தும் அல்லிதுறையிலுள்ள சாவேரியார்புரம் பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00