கேரளப்பகுதியில் மாவோயிஸ்டுகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு நாள் : நீலகிரியில் 13 எல்லை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பு

Nov 24 2017 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்ட எல்லையில் கேரளப்பகுதியில் மாவோயிஸ்டுகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் 13 எல்லை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கூடலூரை ஒட்டிய பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி மாவோயிஸ்ட் தலைவர்கள் தேவராஜ் மற்றும் அஜீதா ஆகியோர் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஒருவருடத்திற்குள் பழிதீர்ப்போம் என மாவோயிஸ்ட்டுகள் அறிவித்திருந்ததால் கூடாலூரை ஒட்டியப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து பாட்டவயல், மாயார், கக்கநல்லூர், நாடுகானி, எருமாடு, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் 13 எல்லைச் சாவடிகளில் அதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் பகுதிகளில் இருந்தும் நக்சல் தடுப்புப் பிரிவு காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் கூடுதலாக வரவழைக்கப்பட்டு, 7 எல்லைசாவடிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடபட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00