தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம், செட்டாப் பாக்ஸ் வாங்கியதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு - மாண்புமிகு அம்மா அறிவித்தபடி பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ் விலையில்லாமல் வழங்கப்படவில்லை என்றும் புகார்

Dec 17 2017 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம், செட்டாப் பாக்ஸ் வாங்கியதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. மேலும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அறிவித்தபடி பொதுமக்களுக்கு செட்டாப் பாக்ஸ் விலையில்லாமல் வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர் அசோஷியேசன் நிறுவனர், பி. சகிலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த மாண்புமிகு அம்மா அறிவித்தபடி செட்டாப் பாக்‍ஸ்கள் பொதுமக்‍களுக்‍கு விலையில்லாமல் வழங்கப்பட வில்லை என்றும், மறைமுகமாக மக்‍களிடமே கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்‍கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதேபோல், தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர் பொதுநல சங்கத்தின் மாநிலத்தலைவர் ஆறுமுகம் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளிக்‍கையில், செட்டாப்பாக்‍ஸ் வாங்கியதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் அந்த செட்டாப்பாக்‍ஸ்கள் தரமற்றவையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00