ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் டிடிவி தினகரனுக்‍கு ஆதரவாக, ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கழகத்தினருக்‍கு, போலீசார் தொடர்ந்து அனுமதி மறுப்பு - பொய் வழக்‍கு போடப்படும் என மிரட்டல்

Dec 17 2017 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான திரு.டிடிவி தினகரனுக்‍கு ஆதரவாக, ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கழகத்தினருக்‍கு, போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதோடு, பொய் வழக்‍கு போடப்படும் என மிரட்டி வருகின்றனர். ஆனால், தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்‍கவிட்ட ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ். தரப்பினரின் பிரச்சாரத்திற்கு, காவல்துறையினர் பாதுகாப்புடன் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். காவல்துறையினரின் இந்த பாரபட்ச நடவடிக்‍கைக்‍கு, ஆர்.கே. நகர் தொகுதி பொதுமக்‍களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் ஒப்புதலோடு போட்டியிடும் வெற்றி வேட்பாளரும், கழக துணைப் பொதுச் செயலாளருமான திரு. டிடிவி தினகரனுக்‍கு, நாளுக்‍கு நாள் பொதுமக்‍களின் ஆதரவு பெருகி வருகிறது. மேலும், வெற்றிச் சின்னமாம் "பிரஷர் குக்‍கர்" சின்னத்திற்கு தங்களது முழு ஆதரவு என தொகுதி மக்‍கள் உறுதியுடன் உள்ளனர்.

இதனை பொறுத்துக்‍கொள்ள முடியாத ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்பினர், தோல்வி பயம் காரணமாக, தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அமைதியான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கழகத்தினர் மீது, காவல்துறையினரின் உதவியுடன் பிரச்சாரம் செய்ய விடாமல், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்பினரின் தூண்டுதலின்பேரில், கழக நிர்வாகிகளை கைது செய்து பல்‍வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்‍கு உட்பட்ட 42-வது வட்டம் 198 முதல் 200 வாக்‍கு மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழக நிர்வாகி தலைமையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தோல்வி பயம் காரணமாக, ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்பினர் தூண்டுதலின்பேரில், வேண்டுமென்றே பிரச்சார‌த்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், எடப்பாடி பழனிச்சாமியின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகின்றனர்.

அதேசமயம், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். தரப்பினரின் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியதோடு, காவல்துறையினர் அவர்களுக்‍கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவரும் கழகத்தினருக்‍கு அனுமதி மறுத்து வரும் காவல்துறையினர், பொய் வழக்‍கு போடப்போவதாக மிரட்டி வருவதற்கு, கழகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00