ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, மணலி தனியார் திருமண மண்டபத்தில் இபிஎஸ், ஓ.பி.எஸ். அணியினர் பணம் பதுக்கல் - கழக நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு - தகவலின் பேரில் சம்பவப் பகுதிக்‍கு விரைந்த காவல்துறையினர் கண்துடைப்புக்‍காக சோதனை - படம்பிடித்த ஜெயா தொலைக்‍காட்சி செய்தியாளர்கள் மீது ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தாக்‍குதல் நடத்தி அராஜகம்

Dec 17 2017 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக, பணம் பதுக்‍கிவைக்‍கப்பட்டிருந்த மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை கழக நிர்வாகிகள் முற்றுகையிட்டனர். தகவலின் பேரில் சம்பவப் பகுதிக்‍கு விரைந்த காவல்துறையினர் கண்துடைப்புக்‍காக சோதனை நடத்தினர். இதனை படம்பிடித்த ஜெயா தொலைக்‍காட்சி செய்தியாளர்கள் மீது ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தாக்‍குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆளும் கட்சியினர், தோல்வி பயம் காரணமாக, வாக்‍காளர்களுக்‍கு பணம் விநியோகம் செய்து வாக்‍குகளை பெற்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுகின்றனர். ஆர்.கே.நகர் தொகுதிக்குள் கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால், ஆர்.கே. நகர் தொகுதிக்‍கு வெளியே மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பணம் பதுக்‍கி வைத்திருந்தனர். இதனையறிந்த கழகத் தொண்டர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு காவல்துறையினருக்‍கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்‍கு வந்த காவல்துறையினர் கண்துடைப்புக்‍காக சோதனை நடத்தினர். இதனை படம்பிடிக்‍கச் சென்ற ஜெயா தொலைக்‍காட்சி செய்தியாளர்கள் மீது ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தாக்‍குதல் நடத்தியதுடன் கேமராவைப் பறித்து ரகளையில் ஈடுபட்டனர். ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்‍கு உதவிடும் வகையில், செய்தியாளர்களை மண்டபத்திற்குள் பூட்டிவைத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அராஜகத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரை அடுத்த தேரடி வீதியில், ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன், ஆர்.கே. நகர் தொகுதி வாக்‍காளர்களுக்‍கு பணம் விநியோகம் செய்வதற்காக தனது அலுவலகத்தில் லட்சக்‍கணக்‍கில் பணம் பதுக்‍கிவைத்திருந்தார். அதனை, ஒவ்வொரு பகுதிக்‍கும் மொத்தமாக விநியோகிப்பதற்காக தனது ஆதரவாளர்களுக்‍கு வழங்கி வந்தார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் அளிக்‍கப்பட்ட புகாரின்பேரில், அவர்கள் கண்துடைப்புக்‍காக சோதனை நடத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00