உதகையிலிருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் திடீரென இயங்காததால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி

Dec 16 2017 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 7 ஆயிரம் ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க கோரி இரண்டு நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட போக்குவரத்து ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதகை பணி மனை நுழைவாயில் அமர்ந்த ஊழியர்கள் அரசு பேருந்துகளை இயக்க மறுத்தனர். இதனால் மாவட்டத்தில் இயக்கப்படும் 350-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக உதகையிலிருந்து கிராம புறங்களுக்கு இயக்கப்படும் 180-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்காததால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் தனியார் மினி பேருந்துகள் மூலம் மக்களை கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00