ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினர் உச்சகட்ட பணப்பட்டுவாடா - போலீசாரால் அழைத்துச்செல்லப்பட்ட கழக நிர்வாகியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், நியாயம் கேட்டும் பெண்கள் சாலை மறியல் - போலீசார் தடியடி நடத்தியதில் 3 பெண்கள் காயம்

Dec 18 2017 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கழக துணைப் பொதுச் செயலாளரும் வெற்றி வேட்பாளருமான திரு.டிடிவி தினகரனுக்‍கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட கழக நிர்வாகியும், ஊர்த்தலைவருமான வேலு என்பவரை போலீசார் அடித்து உதைத்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் கொந்தளிப்படைந்த அப்பகுதி மக்‍கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் எப்படியேனும் டெபாசிட் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அணியினர் உச்சகட்ட பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர். வாக்‍காளர் ஒருவருக்‍கு தலா 6 ஆயிரம் ரூபாய் பட்டுவாடா செய்யும் மோசடி செயலிலும் ஈடுபட்டுள்ளனர். இவற்றை தடுக்‍க முற்படும் கழகத்தினர் மீது வேண்டுமென்றே பொய் வழக்‍கு போட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்‍குட்பட்ட கொருக்‍குப்பேட்டை பகுதியில் ஊர்த்தலைவராக இருந்துவரும் கழக நிர்வாகி திரு. வேலுவை போலீசார் திடீரென அடித்து உதைத்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர். இதனால், கொந்தளிப்படைந்த அப்பகுதி மக்‍கள் மணலி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

எனினும் ஊர்த்தலைவர் வேலுவை விடுதலை செய்ய போலீசார் மறுத்ததால் கோபமடைந்த உறவினர்களும், பெண்களும் போலீசாரிடம் கடும் வாக்‍குவாதத்தில் ஈடுபட்டனர்.

உச்சகட்டமாக பெண் ஒருவர் தனது எதிர்ப்பை தெரிவிக்‍கும் வகையில், தீப்பெட்டியுடன் டாங்கர் லாரி மீது ஏறி தற்கொலை செய்ய முயன்றார்.

நீண்டநேரம் சாலை மறியல் போராட்டம் நீடித்ததால், திணறிய போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதில் 3 பெண்கள் காயமடைந்தனர். போலீசாரின் அத்துமீறல் நடவடிக்‍கையால் ஆர்.கே.நகர் கொருக்‍குபேட்டை பகுதி போர்க்‍களமாக காட்சி அளித்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00