கேரள மாநிலத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று ஒக்‍கி புயலில் சிக்கி மாயமான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஊர் திரும்பினர் - மேலும் இருவரது நிலை தெரியாததால் உறவினர்கள் கவலை

Dec 17 2017 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள மாநிலத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்று ஒக்‍கி புயலில் சிக்கி மாயமான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் ஊர் திரும்பியுள்ளனர். மேலும், இருவரது நிலை தெரியாததால் உறவினர்கள் கவலையடைந்தள்ளனர்.

நாகை மாவட்டம் சிர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள கடலோர கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கன்னியாகுமரி மற்றும் கேரளா மாநிலத்தில் தங்கி மீன் பிடித்தொழில் செய்துவந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட ஒக்‍கி புயலில் சிக்கி இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் பலர் மாயமாகினர். கடல் சீற்றம் தனிந்துள்ள நிலையில் கடலில் தத்தளித்த மற்றும் தீவுகளில் கரை ஒதுங்கிய சிலர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி தொடுவாய் கிராமத்தில் இருந்து கேரளா சென்ற 5 மீனவர்கள் மாயமாகினர். அதில் ஏழுமழை, தமிழ்பாலன் மற்றும் வானகிரியை சேர்ந்த சங்கர் ஆகிய மூவர் கரை சேர்ந்து சொந்த ஊரான கூழையார் கிராமத்திற்கு திரும்பினர். அவர்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். கரை திரும்பிய மூன்று மீனவர்களும் புயலில் சிக்கி குஜராத் கடற்கரையில் ஒதுங்கியதாகவும், கடல் சீற்றம் குறைந்ததும் திரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள கலைமணி, வெங்கடேசன் ஆகிய இருவரது நிலை என்னவென்று தெரியவில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். மேலும் மாயமான இரண்டு மீனவர்களையும் விரைவில் மீட்டுதர மீனவர்கள் மற்றும் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00