தனுஷ்கோடி நகரம் கடலில் மூழ்கியதினம் இன்று அனுசரிப்பு

Dec 22 2017 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் தவிர்க்‍கமுடியாத அடையாளங்களில் ஒன்றான தனுஷ்கோடி நகரம், கடலில் மூழ்கி மண்ணோடு மண்ணாகிப் போனதன் 53-வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்‍கப்படுகிறது. மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா இந்த புராதன சிறப்பு மிக்‍க நகரத்தை, அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்‍க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவு கூரலாம்.

ஆர்ப்பரிக்‍கும் இந்தக்‍ கடல் அலைகள்தான் அன்று கடும் சீற்றத்துடன் எழுந்து தனுஷ்கோடி நகரை சின்னபின்னமாக்‍கின. 1964ம் ஆண்டு இதேநாள் நள்ளிரவில் கடல் அன்னையின் மடியில் துயில் கொண்டிருந்த தனுஷ்கோடி நகரம், மிகக்‍ கொடூரமான ஒரு புயலின் பிடியில் சிக்‍கியது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த சூறாவளிப் புயல் தனுஷ்கோடி நகரை வேரோடு பெயர்த்து எடுப்பதுபோல் பேயாட்டம் போட்டது. பனைமர உயரத்திற்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகளாலும், அதிபயங்கர கடல் சீற்றத்தாலும் தனுஷ்கோடி நகரம் கடலுக்‍குள் சென்றது. அது நள்ளிரவு நேரம் என்பதால் அப்போது தூக்‍கத்தில் இருந்தபடியே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சில மணிநேரங்களில் வீடுகள், வணிக கட்டடங்கள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கி மண்மேடாகக்‍ காட்சியளித்தன. அன்றைய தினம், சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்‍கு சென்ற போட்மெயில் ரயிலும், புயலின் அசுரத்தனத்திற்கு ஆளாகி அடித்துச் செல்லப்பட்டதால், அதில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

வர்த்தக சிறப்பையும், வரலாற்று பெருமையும் கொண்ட தனுஷ்கோடி நகரம், ஒரேநாளில் முழுமையாக சிதைக்‍கப்பட்டதை கண்டு ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. மனிதர்கள் வாழ தகுதியில்லாத நகரமாகவே தனுஷ்கோடி மாறியது. பரபரப்புக்‍கு பஞ்சமில்லாத ஒரு வணிக நகரம், ஆள் அரவமற்ற ஒரு மயானமாக மாறி, ஒரு காட்சிப்பொருளாக பரிதாபத்துடன் காட்சி அளித்தது.

புயலின் கோரத் தாண்டவத்திற்கு பலியாகி இன்றுடன் 53 ஆண்டுகள் ஆகின்றபோதிலும், ராமேஸ்வரத்திற்கு வரும் பக்‍தர்களும், சுற்றுலாப் பயணிகளும் தனுஷ்கோடியை சென்று பார்க்‍க தவறுவதில்லை. அங்கு மிச்ச சொச்சங்களாக இருக்‍கும் ரயில்நிலையம், தேவாலயம், ரயில்பாதை ஆகியவற்றை கனத்த இதயத்துடன் பார்வையிட்டு தங்களை தேற்றிக்‍கொள்கின்றனர். மேலும் தனுஷ்கோடி நகரம் மீண்டும் புதுப்பொலிவு பெறும் வகையில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூருகின்றனர்.

தனுஷ்கோடியின் பழமை மாறாமல் மாண்புமிகு அம்மா அதனை புதுப்பிப்பதற்கான திட்டங்களை வகுத்தும் இன்றைய அரசு நிறைவேற்றாததற்கு அவர்கள் கண்டனம் தெரிவிக்‍கின்றனர்.

வரலாற்று சிறப்பு மிக்‍க தனுஷ்கோடி நகரம் பாரம்பரிய பெருமையுடன் கூடிய ஒரு சுற்றுலா தலமாக பொலிவு பெற வேண்டும் என மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா விரும்பியபடி, விரைவில் அந்த லட்சியம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே நம் அனைவரது எதிர்பார்ப்பு...
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00