நாகை மாவட்டத்தில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் நீடூருக்கு செல்லும் வழியில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க சிறுபான்மையினர் கடும் எதிர்ப்பு

Jan 20 2018 11:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாகை மாவட்டத்தில், இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் நீடூருக்கு செல்லும் வழியில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிறுபான்மையினர் ஊர்வலமாக சென்று கோட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர், நெய்தவாசல் ஆகிய பகுதிகள் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு நீடூர் ரயில் கேட் அருகில் பல்லவராயன்பேட்டை என்ற இடத்தில் புதியதாக தகரகொட்டகை அமைத்து டாஸ்மாக் கடை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இஸ்லாமியர்களும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகள் பெண்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள இஸ்லாமியர்கள் மீறி திறந்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி நீடூர் நெய்தவாசல் பகுதி முஸ்லீம் ஜமாத்தார்கள் தலைமையில் ஏராளமான சிறுபான்மையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கோட்டாச்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00