பன்மடங்கு பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்‍கள் கடும் பாதிப்பு - பழைய கட்டணம் எனக்‍ கருதி பேருந்தில் பயணித்த ஆயிரக்‍கணக்‍கான மக்‍கள் கட்டண உயர்வால் பரிதவிப்பு ஈ.பி.எ.ஸ். - ஓ.பி.எஸ். நடவடிக்‍கைக்‍கு கடும் கண்டனம்

Jan 20 2018 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேரு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இன்று பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருமடங்கு அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ள மக்கள், ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒசூரிலிருந்து சூளகிரிக்கு பத்து ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம், தற்போது 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அதேபோல், கிருஷ்ணகிரி வரை 15 ரூபாயாக இருந்த கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினர்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதை பொதுமக்கள் பலர் திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசுப் பேருந்து சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் இருந்த பயணிகளும் மறியல் போராட்டத்தில் பங்கேற்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்ல முடியாததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதுரை பெரியார் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், அரசு பேருந்துகளை மறித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒருமணி நீடித்த இந்த போராட்டத்தையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00