உலக தாய்மொழி தினத்தையொட்டி,கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும், கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் எம்.எல்.ஏ. வாழ்த்து - உலக நாடுகள் அங்கீகரித்த தமிழ்மொழி, இந்திய அரசால், ஆட்சி மொழியாகவும், வழக்‍காடு மொழியாகவும் அறிவிக்‍கப்படாத நிலையை மாற்றிக்‍காட்டுவோம் என உறுதி

Feb 21 2018 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக தாய்மொழி நாள் கொண்டாடும் அனைவருக்‍கும், கழக துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அகமகிழ்ந்து அங்கீகரித்த தமிழ்மொழி, இந்திய அரசால், ஆட்சி மொழியாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்‍காடு மொழியாகவும் இன்னமும் அறிவிக்‍கப்படாத நிலையை மாற்றிக்‍காட்டுவோம் என திரு. டிடிவி. தினகரன், தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும், கழக துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி. தினகரன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஐ.நா. மன்றத்தால் அங்கீகரிக்‍கப்பட்ட நாளாக இன்று, உலக தாய்மொழி நாளை கடைபிடிக்‍கிறோம் என தெரிவித்துள்ளார்.

தொன்மையை, இனிமையை, இலக்‍கணத்தை தன்னகத்தே கொண்டு, நீதியை, அறத்தை, வாழ்க்‍கை முறையை பல்லாயிரம் ஆண்டுகளுக்‍கு முன்னரே அறிவித்த தனிச்சிறப்புமிக்‍க உலகின் மூத்த மொழியான நம் தமிழ் மொழியின் பெருமையினை போற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகள் பல அகமகிழ்ந்து அங்கீகரித்தும், இந்திய அரசால், ஆட்சி மொழியாகவும், சென்னை உயர்நீதிமன்ற வழக்‍காடு மொழியாகவும் இன்னமும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி அறிவிக்‍கப்படாத நிலையை மாற்றிக்‍காட்டுவோம் என்றும் திரு. டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

"தமிழ் எங்கள் உயிருக்‍கு நேர்" என்று பாவேந்தர் சொன்னதுபோல், நம் தாய் திரு தமிழ் மொழியை போற்றுவோம், காப்போம் என உலக தாய்மொழிநாள் கொண்டாடும் அனைவருக்‍கும் திரு. டிடிவி தினகரன், தமது வாழ்த்துக்‍களை தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00