மாண்புமிகு அம்மாவை எதிர்த்து நடிகர் கமலஹாசன் அறிக்‌கை விட்டவர் என்பதால், மக்கள் அவரை புறக்கணிப்பார்கள் - கழகப் பொதுச்செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., பேட்டி - காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தல்

Feb 22 2018 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலில் செயல்படும், கழக துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், கழகப் பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதலில் செயல்படும் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., மக்‍களின் பேராதரவோடு அமோக வெற்றிபெற்றார். ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளர் மதுசூதனனைவிட 40 ஆயிரத்து 707 வாக்‍குகள் அதிகம் பெற்று சாதனை படைத்தார். திரு. டிடிவி தினகரனை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 57 பேர் டெபாசிட் இழந்தனர்.

அதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி முதல்கட்டமாக, ஆர்.கே.நகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து கழக துணைப்பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜிநகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது திரு.டிடிவி தினகரனுக்கு தொண்டர்களும், பொதுமக்களும் மலர் கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து மூன்றாம் கட்டமாக கடந்த 7ம் தேதி, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற கழக துணைப்பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன், வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். அப்போது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் வாழ்த்து முழக்கம் எழுப்பி, செண்டை மேளம் முழங்க எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதைத்தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்‍குட்பட்ட 43-வது வட்டத்திற்கு உட்பட்ட திடீர் நகர், கருமாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில், கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன் பொதுமக்‍களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அங்கு கூடியிருந்த திரளான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் அவருக்கு வாழ்த்து முழக்கம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாண்புமிகு அம்மாவை எதிர்த்து அறிக்‌கை விட்டவர் நடிகர் கமலஹாசன் என்பதால், மக்கள் அவரை புறக்கணிப்பார்கள் என்று தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, தமிழகம் வரும் பிரதமரிடம் நேரில் வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வேன் என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பல்லவன் நகரிலுள்ள கருமாரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்த திரு.டிடிவி தினகரன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

பின்னர், அண்மையில் திருமணம் நடைபெற்ற பவர் குப்பம் பகுதியை சேர்ந்த கழக உறுப்பினர் கோதண்டன் - மஞ்சுளா தம்பதியின் வீட்டிற்கு சென்ற திரு. டிடிவி தினகரன், மணமக்களை வாழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து பவர் குப்பம் பகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு மலர்தூவி, பட்டாசு வெடித்து, விண்ணதிர வாழ்த்து முழக்கம் எழுப்பி வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, பவர் குப்பம் பகுதியை சேர்ந்த கோகுல் - அம்மு தம்பதியரின் குழந்தைக்கு ராஜேஷ் என பெயர் சூட்டினார்.

அதைத்தொடர்ந்து புதுமனை குப்பத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பூதகாளி அம்மன் ஆலயத்தில் கழக துணைப் பொதுச் செயலாளரும், ச‌ட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன் வழிபாடு செய்தார். அப்போது ஆலய நிர்வாகிகள் சார்பாக தீப ஆராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.

புதுமனை குப்பத்தில் திரு.டிடிவி தினகரனை வரவேற்று, அப்பகுதி மக்கள் வீடுகளில் பூக்களால் கோலமிட்டு, மலர் தூவி, பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். கழக துணைப் பொதுச் செயலாளரும், ச‌ட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து, புதுமனை குப்பத்தில், பொதுமக்கள‌ிடையே பேசிய திரு.டிடிவி தினகரன், தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியாளர் இந்த தொகுதிக்கான திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். நிச்சயம் பொதுமக்களோடு சேர்ந்து போராடி திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று உறுதிபடத்தெரிவித்தார்.

சிங்கார வேலன் நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தந்த திரு.டிடிவி தினகரனுக்கு, பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது வாணவேடிக்கையுடன் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

காசிமா நகர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த கழக துணை பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரனுக்கு அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், மலர்தூவியும் வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, வ.உ.சி நகரை சேர்ந்த கழக உறுப்பினர் திரு.இ.பாபு - தேவகி தம்பதியினரின் மகள் கெளரி - லிங்கேஸ்வரன் புதுமணத் தம்பதிகளுக்கு கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.டிடிவி தினகரன், நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, கழக உறுப்பினர் திருமதி. மீனாவின் மகன் காதணி விழாவில் பங்கேற்க வருகை தந்த திரு.டிடிவி தினகரனை, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்தும், பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர், வ.உ.சி. நகர் தெற்கு தெருவில் மின்கசிவு காரணமாக பொருட்கள் எரிந்து சேதம் அ‌‌டைந்திருந்த ராணி என்பவரது வீட்டிற்கு, நேரில் சென்ற கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி தினகரன், அவருக்கு ஆறுதல் கூறியதோடு, எல்.இ.டி. டிவியையும் வழங்கினார்.

பின்னர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தந்த கழக துணைப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. டிடிவி. தினகரக்கு ஏராளமான பொதுமக்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனைதொடர்ந்து சி.ஜி. காலனி பகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, காவல்துறையினர் விரட்டும் போது கடலில் விழுந்து உயிரிழந்த சி.ஜி. காலனி பகுதியை சேர்ந்த தமிழரசன் வீட்டுக்கு சென்ற திரு. டிடிவி தினகரன் எம்.எல்.ஏ., அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து சி.ஜி. காலனி பகுதியில் சேதமடைந்துள்ள மீன் மார்க்கெட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க அரசுக்கு வலிறுத்தப்படும் என தெரிவித்தார்.

பின்னர், தண்டையார் நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.,வுக்கு அப்பகுதி மக்கள் மேளதாளம் முழங்க மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மக்களின் பிரச்னைகளை தீர்க்க செயல்படுவேன் என உறுதியளித்தார்.

அதனைதொடர்ந்து, தண்டையார் பேட்டை பகுதிக்குட்பட்ட பிள்ளையார் கோவில் தெரு, கணக்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு திரு. டிடிவி தினகரன் நன்றி தெரிவித்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி மலர்தூவி அவரை வரவேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00