ஈரோட்டில் பழைய இரும்புக் கடை வியாபாரி வீட்டில் 52 சவரன் நகைகள், ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை : மக்கள் பீதி

Feb 22 2018 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு அருகே பழைய இரும்புக் கடை வியாபாரி வீட்டில் 52 சவரன் நகைகள், ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நிசியனூர் பகுதியில் வசித்து வருபவர் திரு. மாடசாமி. பழைய இரும்பு கடை நடத்தி வரும் இவர், தனது மனைவி ஊருக்கு சென்றதால், கடையிலேயே படுத்து உறங்கியுள்ளார். இதனையறிந்த கொள்ளையர்கள், அவரது வீட்டிற்குள் புகுந்து, பீரோவிலிருந்த 52 சவரன் நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக மாடசாமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சித்தோடு காவல்துறையினர், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துபட்டு அருகே விவசாயியின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள், 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் வசித்து வரும் திருமதி. தாமரைசெல்வி என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கல்லக்குடி போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், செயினை பறித்து தப்பியோட முயன்ற திருடனை அங்கிருந்த வாலிபர்கள் விரட்டிச் சென்று பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00