தேனிக்கு வருகை தந்த கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம் : போராட்டக்காரர்கள் கைது

Mar 22 2018 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேனி அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. உம்மன்சாண்டிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, கேரளா முன்னாள் முதலமைச்சர் திரு. உம்மன்சாண்டி வருகை தந்தார். அப்போது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் இயக்கம் மற்றும் முல்லைப்பெரியார் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிர் நிலைப்பாடு கொண்டிருந்த திரு. உம்மன்சாண்டி, தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அவர்களை கலைக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்தப் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00