தூத்துக்‍குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம் - போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லவில்லை

Mar 24 2018 10:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்தை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மீனவர்கள் இன்று கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லவில்லை.

தூத்துக்‍குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்‍கத்தினை கண்டித்து, ஆலையின் அருகில் உள்ள குமரரெட்டியார்புரம் கிராம மக்‍கள் கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆலை விரிவாக்‍கத்தை கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்‍கத்தினர் இன்று மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு தூத்துக்‍குடி நகர வணிகர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நகரின் பிரதான சாலைகளில் கடைகள் அடைக்‍கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடியது. திருவைகுண்டம், புதியம்புத்தூர் பகுதிகளிலும் கடைகள் அடைக்‍கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்‍குடி மீனவர்கள் இன்று கடலுக்‍கு மீன்பிடிக்‍கச் செல்லவில்லை. போராட்டத்திற்கு ஆதரவாக உப்பளத் தொழிலாளர்களும் பணிக்‍குச் செல்லவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00