கர்நாடக தேர்தலைக்‍ கருத்தில்கொண்டே மத்திய அரசு, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்‍காமல் காலம் கடத்துகிறது - விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

Mar 24 2018 10:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேர்தலைக்‍ கருத்தில்கொண்டே மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்‍காமல் காலம் கடத்தி வருவதாக, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவேரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட தமிழக அரசு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்‍க வேண்டும் என வலியுறுத்தினார். கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேர்தலை கருத்தில்கொண்டே காவேரி மேலாண்மை வாரியம் அமைக்‍காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவருவதாக அவர் குற்றம்சாட்டினார். மத்திய அரசைக்‍ கண்டித்து, டெல்லி நாடாளுமன்றம் முன்பு, 29ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்‍கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00