கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்‍ கூட்டங்கள் நடைபெற்றன

Mar 24 2018 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தலின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்‍ கூட்டங்கள் நடைபெற்றன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது. இக்‍கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா வழிகாட்டுதல்படி செயல்படும் துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், தஞ்சையில் நாளை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக திருவண்ணாமலை வடக்‍கு மாவட்டம் சார்பில், பெருந்திரளான அளவில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சி. ஏழுமலை மற்றும் போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து 500-க்‍கும் மேற்பட்ட நிர்வாகிகள் இக்‍கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டக்‍ கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு மாற்றுக்‍ கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் விலகி, கழகப் பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மாவின் தலைமையை ஏற்று, கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கரங்களை வலுப்படுத்தும் வகையில், கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. K.T. பச்சைமால், அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு. லட்சுமணன் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கடலூர் கிழக்‍கு மாவட்டக்‍ கழகம் சார்பில் கடலூரில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டத்தில், தஞ்சையில் நாளை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ஆயிரக்‍கணக்‍கானோர் கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்‍கூட்டத்தில், மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. வி.டி. கலைச்செல்வன், கடலூர் நகரக்‍ கழகச் செயலாளர் திரு. கே.எஸ். கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை மாநகர் மாவட்டக்‍ கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டத்தில், தஞ்சாவூரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்‍கணக்‍கில் பங்கேற்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இக்‍கூட்டத்தில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00