கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் அபாயம் : உள்ளாட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு - கையாலாகாத அரசை நடத்திவரும் எடப்பாடி தரப்பினருக்கு கடும் கண்டனம்

Mar 25 2018 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு பவனி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள், கையில் குருத்தோலை ஏந்தியபடி, ஓசன்னா பாடல்களைப் பாடியபடி சென்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேத்தில், இயேசு கிறிஸ்து பாடுகளை ஏற்பதற்காக சென்ற பயணத்தை நினைவுகூரும் வகையில், இன்று, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி மேற்கொண்டனர். இதில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள், கைகளில் குருத்தோலை ஏந்தி, ஓசன்னா பாடல்களை பாடியபடி சென்றனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயம், தூத்துக்குடி மாதா தேவாலயம், மதுரை ஞானஒளிபுரம் தூயவளனார் தேவாலயம், திருவாரூர் தேவாலயம், திண்டுக்கல் தூய பவுல் பேராலயம், தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் புனித சவேரியர் ஆலயம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்துவத் தேவாலயங்களில் குருத்தோலை பவனியும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, புதுச்சேரியில், புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம், தூய இருதய ஆண்டவர் பலிசிக்கா, நெல்லித்தோப்பு விம்ணேற்பு மாதா ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கடலூர் ஆற்காடு லுத்தரன் திருச்சபை, கிருஷ்ணகிரி புனித இஞ்ஞாசியர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ தேவாலயங்களில் திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00