கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஓ.பிஎஸ் முறைகேடு அம்பலம் - சென்னை ராயப்பேட்டையில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு

Apr 19 2018 3:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முக்கியப் பதவிகளை கைப்பற்ற இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், பணம் பெற்றுக் கொண்டு பதவிகளை விற்பனை செய்த நிகழ்வு தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் 4 கட்டங்களாக கூட்டுறவுத் தேர்தல் அறிவிக்‍கப்பட்டு முதற்கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெற்றதால், இதுதொடர்பான வழக்‍கில் மேற்கொண்டு வேட்பு மனு தாக்‍கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர் கவிதா ராஜேந்திரன் தலைமையில் திரண்டு வந்த நூற்றுக்‍கணக்கானோர், சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு கொறடாவாக உள்ள ராஜேந்திரன், பணம் பெற்றுக்‍கொண்டு பதவிகளை கூறுபோட்டு விற்பனை செய்வதாக அப்போது அவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முக்‍கியப் பதவிகளை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்‍கும், ஓ.பன்னீர் செல்வம் அணிக்‍கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00