உதகையில் கோலாகலமாகத் தொடங்கியது 122வது மலர்க்‍கண்காட்சி - பார்வையாளர்களுக்‍கு விருந்து படைக்‍கும் 5 லட்சம் வண்ண மலர்கள் - கண்காட்சியைக்‍ காண தேனீக்‍களாக புகுந்த சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

May 18 2018 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொன்னை வைக்‍கும் இடத்தில் ஒரு பூவையாவது வையுங்கள்... மனசு பூ என்றாலும், பூ​வைப்பதால்தான் ஒரு பெண் கூட பூவாகிறாள்... தாவரங்கள் பூக்‍காவிட்டால் இப்பூவுலகிற்கு உணவு ஏது... பூப்பதால்தான் வசந்தகாலம் வளமையாய் ஒளிர்கிறது.... இளமாய் மிளிர்கிறது.... அதனைக்‍ கொண்டாடத்தான் பூக்‍களுக்‍கான இந்த திருவிழா... இதோ அந்த மலர்க்‍ கண்காட்சி....

ஊட்டி... தமிழகத்தின் குளிர்சாதனப் பெட்டி... இந்த மலை ராணிக்‍கு பூக்‍களே மேலாடை... இந்த பூக்‍களுக்‍கெல்லாம் இங்குள்ள தாவரவியல் பூங்காதான் தாய்வீடு... கோடை விடுமுறையில் பேரன், பேத்திகள், தாத்தா பாட்டிகளை தேடிச் செல்வதைப் போல், ஆண்டுதோறும் பூக்‍களெல்லாம் இப்பூங்காவில் ஒன்றுகூடி வண்ணம் சிந்துகின்றன... வாசம் வீசுகின்றன... 122வது ஆண்டாக இன்று தொடங்கிய இந்த மலர்க்‍ கண்காட்சியில்தான் எத்தனை எத்தனை மலர்கள்... எத்தனை எத்தனை ரகங்கள்... கோடை சீசனை மேலும் குளிர்விக்‍கவே தொடங்கியிருக்‍கிறது இந்த கண்காட்சி.

நீலகிரி அன்னைக்‍கு பச்சை பொட்டு வைத்தாற்போல் அமைந்துள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ஒவ்வொரு ஆண்டும் மலர்க்‍கண்காட்சி நடத்தி பெருமை கொள்கிறது. அதன் வரலாற்றையும் எடுத்துச் சொல்கிறது... வண்ணத்துப் பூச்சிகளை இங்கே செடி, கொடிகளில் கட்டிப்போட்டது யார்? என கேட்கும் வண்ணம், எத்தனை வண்ணம் இந்த பூக்‍களுக்‍கு. எந்தப்பக்‍கம் திரும்பினாலும் பூக்‍களின் பார்வை நம் நெஞ்சைத் தொடுகிறது. துலிப் என்கிறார்கள், லில்லியம் என்கிறார்கள், ஜெர்பரா, கார்னேஷன், டஃபோடில்ஸ், டயாந்தஸ், ஆஸ்டர் மேரியா, அழகு டேலியா என பெயர்கள் சிக்‍கலாக இருந்தாலும், பூக்‍கள் தூக்‍கலாக இருக்‍கின்றனவே. இயற்கை பிடித்த தூரிகை இங்கே பூக்‍கோலம் போட்டிருக்‍கிறது. வேர்கள் தீட்டிய ஓவியம், மலர்களாய் பொலிந்துக்‍கிடக்‍கிறது. இது வானவில் இங்கே உடைந்து சிதறிக்‍கிடக்‍கிறதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. பூக்‍களின் ராணியாம் ரோஜாக்‍களும் வண்ணம் சிந்தி வனப்பைக்‍ கூட்டுகின்றன.

புல்வெளி இடையே முளைத்த செடிகள், தொட்டிகளில் விதைத்தச் செடிகள், அரங்குகளை அலங்கரித்த செடிகள், தென்றலில் தவழும் கொடிகள் என அனைத்திலும் பூக்‍கள் பூத்துக்‍கிடக்‍கின்றன. ஒரு பூச்செடியின் பூக்‍களே நம் மனங்களை நிறைக்‍கும்போது, இங்கே 5 லட்சம் மலர்ச்செடிகள் மலர்ந்து நம் நெஞ்சை அள்ளுகின்றன. தண்ணீர் ததும்பும் மேட்டூர் அணை இங்கே ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்‍கப்பட்டு புன்னகை ததும்பி நிற்கிறது. இதேபோல், 25 ஆயிரம் தொட்டிகளுடன் பூத்துக்‍குலுங்கும் இத்தாலியன் பூங்கா, 10 ஆயிரம் மலர்களைக்‍ கொண்டு வடிவமைக்‍கப்பட்ட செல்ஃபி ஸ்பாட் போன்றவையும் கண்காட்சிக்‍கு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளன.

இன்று தொடங்கிய இந்த மலர்களின் மாநாடு, 5 நாட்களுக்‍கு தொடர்ந்து மனம் வீசி, நம் மனங்களை கொள்ளையடிக்‍கக்‍ காத்திருக்‍கிறது. அதற்காகவே தாவரவியல் பூங்கா முழுமையாக பூத்திருக்‍கிறது....
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00