100 நாளை நோக்கி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் : அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீர்மானம்

May 19 2018 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்‍குடியில் சுற்றுச்சூழலுக்‍கு பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்டப் போரட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், நூறாவது நாளான வரும் 22-ம் தேதி அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீர்மானிக்‍கப்பட்டுள்ளது.

தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்‍கப்படுவதுடன், நிலம், நீர் மற்றும் காற்றில் மாசு ஏற்பட்டு, பொதுமக்‍கள் பல்வேறு நோய்களுக்‍கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆலையை விரிவாக்‍கம் செய்ய நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை அருகே உள்ள குமரரெட்டியார்புர கிராமத்தினர் உட்பட 18-க்‍கும் மேற்பட்ட கிராம மக்‍கள், கடந்த 97 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்‍கு ஆதரவாக, மாணவ-மாணவிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்‍கு எதிரான போராட்டம் வரும் 22ம் தேதியுடன் 100-வது நாளை எட்டும் நிலையில், கிராம மக்‍கள் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்‍ குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்க மறுத்தால், மாநிலம் முழுதும் உள்ள மத்திய-மாநில அரசு அலுவலகங்களை போராட்டக்‍காரர்கள் முற்றுகையிடுவார்கள் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்‍கத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00