கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் சாலை மறியல் - போலீஸ் குவிப்பு

May 19 2018 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் சரக்‍குப் பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைக்‍க ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து அறிவிக்‍கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்‍கு தடைவிதிக்‍கப்பட்டதோடு, மீனவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவ கிராமங்களில் ஆயிரக்‍கணக்‍கான மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றம் நிலவியது.

கோவளம் சரக்‍குப் பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் அமைக்‍க எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியும், ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியும் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் தடைவிதித்தனர். தடையை மீறுபவர்களை கைது செய்யும் நோக்‍கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்‍கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்‍கப்பட்டனர். 34 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில், மீனவ கிராமங்களில் இருந்து வெளிவந்த மீனவர்களை, தடுத்து நிறுத்தியதோடு, அவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த செயலைக்‍ கண்டித்து, மணக்‍குடி, பள்ளம், சங்குதுறை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்‍கணக்‍கான மீனவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாகன போக்‍குவரத்து முடங்கியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00