உதகையில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த மலர்க் கண்காட்சி : 2 நாட்களில் 55,000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

May 20 2018 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

உதகை தாவரவியல் பூங்கா 122வது மலர் கண்காட்சியில் இயற்கையாக கிடைக்கும் தேவையற்ற பாசிகள், மர இலைகள், மரகட்டைகளை கொண்டு உருவாக்கபட்ட டைனோசர், மான், கங்காரு உள்ளிட்ட உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. இதனைக்‍ காண சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு பிரசித்திபெற்ற 122வது மலர் கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. இந்த கண்காட்சியில் 1 லட்சம் கார்னேசன் மலர்களால் உருவாக்கபட்ட மேட்டூர் அணை, பார்பி டால், செல்பி ஸ்பாட் போன்ற உருவங்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக்‍ கவர்ந்து வருகிறது. பூங்காவில் 5 லட்சம் மலர் செடிககள் நடவு செய்யப்பட்டு தற்போது அதில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த மலா்கண்காட்சியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மரங்களிலிருந்து விழுந்து வீணாகும் மர இலைகள், மர கட்டைகள், மர பாசிகளை கொண்டு அழகு பொருட்களாக தயார் செய்து காட்சிக்கு வைக்கபட்டுள்ளது. டைனோசர், மான், கங்காரு, பாம்பு, கொக்கு, கழூகு மற்றும் விதவிதமான அலங்கார பொருட்கள் கலையம்சத்துடன் வடிவமைக்‍கப்பட்டிருந்தது பலரையும் வெகுவாகக்‍ கவர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 55 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சியை கண்டு களித்துள்ளனர். இன்னும் 3 நாட்களுக்‍கு இந்த மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00