காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல் - கர்நாடக அரசியல் பிரச்னையில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றிவிட்டதாகவும் கருத்து

May 20 2018 6:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் செயல்படுத்த வேண்டும் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த திரு.டிடிவி தினகரன், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவை மாதாமாதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்‍கொண்டார். கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடிக்‍கு சென்ற கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்‍கு கழகம் சார்பில், பட்டாசு வெடித்தும், மேள தாளம் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும், கும்ப மரியாதை அளித்தும் வரவேற்றனர். பின்னர் அங்குள்ள காளியம்மன் கோயிலில் அவர் சிறப்பு தரிசனம் செய்தார். அங்கு திரு.டிடிவி தினகரன் செங்கோல் வழங்கப்பட்டு கவுரவிக்‍கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் எடப்பாடி சுரேஷின் சகோதரர் மகள் இல்லத்திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். மண மக்‍களுக்‍கு திரு.டிடிவி தினகரன் ஆசி வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திரு.டிடிவி தினகரன், அம்மாவின் கோட்டையான எடப்பாடிக்‍கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் துரோக ஆட்சிக்‍கு பொதுமக்‍கள் முடிவு கட்ட வேண்டும் என கேட்டுக்‍கொண்டார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் கழக அவைத் தலைவர் திரு.அன்பழகன், கழக அமைப்புச் செயலாளர் திரு.செந்தில்பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00