தொழில்நுட்ப விழிப்புணர்வை ஏற்படுத்த வாழைத் திருவிழா : 60 வகையான வாழை ரகங்கள் - பார்வையாளர்கள் பிரமிப்பு

Jun 13 2018 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் நடைபெற்ற வாழைத் திருவிழாவில், 80 வகையான வாழை ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

உலக அளவில் அதிகம் விற்பனையாகும் பழங்களில் வாழைப்பழம் குறிப்பிடத்தக்‍கதாகும். இந்தியாவில் இது அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன், மலைவாழை, மொந்தன் போன்ற ரகங்கள் பயிரிடப்படுகின்றன. வாழைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து பயனாளிகளையும் ஒரே தளத்தின் கீழ் ஒருங்கிணைத்து, அவர்களுக்கு தொழிலில் உள்ள பிரச்னைகளுக்கான தீர்வுகள், மேம்பாட்டு வழிவகைகள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய தொழில் கூட்டமைப்புடன், தமிழ்நாடு வாழை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வாழைத் திருவிழா திருச்சியில் நடைபெற்றது.

இந்த திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வாழையில் புதிய பரிணாமங்கள், வாழையின் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், அதிகம் பயன்பெறும் முறைகள், ஏற்றுமதிக்கான வழிமுறைகள், பூச்சிதாக்குதலிலிருந்து காத்தல் போன்றவற்றை விளக்கும் வகையில் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தது. வாழையில் இத்தனை ரகங்களா என வியக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 80 வகையான வாழைப்பழங்கள் காண்போரை சற்று வியக்க வைத்தது.

வாழை விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கினை மாவட்ட ஆட்சியர் திரு.கு.இராசாமணி திறந்து வைத்து பார்வையிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00