ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டத்தை, காவல்துறையைக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசு ஒடுக்குவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு - வரும் தேர்தலில், தக்க பாடம் புகட்டப்படும் என எச்சரிக்கை

Jun 14 2018 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்‍டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன் வழங்குதல், ஊதிய உயர்வு, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

தங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்‍கை எடுக்காத எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து, சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர். சென்னையில், எழிலகம் வளாகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை தலைமைச் செயலகம் நோக்கி, பேரணியாக புறப்பட்டுச் செல்ல முயன்ற, போராட்டக் குழுவினரை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காவல்துறையினரின் அராஜகத்தைக் கண்டித்து, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் விரோத எடப்பாடி அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதன்பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், தங்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்க, காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டினார்கள். தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், அடுத்த இரு தினங்களில் தங்கள் அமைப்பின் உயர்மட்டக் குழுவினர் கூடி, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00