நீட் தேர்வு முடிவால் உயிரிழந்த மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு கழகம் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் கழக நிர்வாகிகள் நேரில் வழங்கி ஆறுதல்

Jun 14 2018 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில், நீட் தேர்வு முடிவால் உயிரிழந்த மாணவி சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு, கழக பொது செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் அறிவுறுத்தலின்படி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகேயுள்ள திருவள்ளுவர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ, 12ம் வகுப்பில் 907 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். மருத்துவர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் திருச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியிலேயே நீட் தேர்வு எழுதினார். இதில் உரிய மதிப்பெண் கிடைக்‍காததால் மனமுடைந்த சுபஸ்ரீ, கடந்த 6-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த மாணவியின் உடலுக்கு, கடந்த 7-ம் தேதி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், கழக பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி, செயல்படும் துணை பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் அறிவுறுத்தலின்படி, கழகம் சார்பில் கழக அமைப்பு செயலாளர் திரு.ஆர். மனோகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், 3 லட்சம் ரூபாய் நிதியுதவியை, மாணவியின் குடும்பத்திற்கு, கழக அமைப்புச் செயலாளரும், திருச்சி வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. ஆர்.மனோகரன் வழங்கினார். கழக அமைப்புச் செயலாளர் திரு. சாருபாலா தொண்டைமான், மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன், தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. ராஜசேகரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3030.00 Rs. 3241.00
மும்பை Rs. 3052.00 Rs. 3232.00
டெல்லி Rs. 3065.00 Rs. 3246.00
கொல்கத்தா Rs. 3065.00 Rs. 3243.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00