உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க பணம் கேட்கும் மருத்துவமனை ஊழியர்கள் : வாட்ஸ் அப் வீடியோ வெளியீடு

Jun 14 2018 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஓப்படைக்க மருத்துவமனை ஊழியர்கள் பணம் கேட்பதாக வாட்ஸ் அப் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனையில் பிணவறையில் பணிபுரியும் ஊழியர்கள், இறந்தவர்களின் உடலை உரியவர்களிடம் ஓப்படைக்க பணம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் நிர்வாகத்திற்கு வருகின்றன. ஆனால் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசு மருத்துவமனையில் பரமசிவம் என்ற ஊழியர், இறந்தவர்களின் உடலை பிரேதப் பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு முன் 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் பிணத்தை வெளியில் கொண்டு செல்ல முடியும் என மிரட்டுவதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவர், ஊழியர் பணம் கேட்கும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி தற்‍போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சடகோபன் என்ற அதிகாரி தலைமையில், குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அரசு மருத்துவமனை டீன் திரு. அசோகன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • AREMPESAVIRUMBU

    Mon - Fri : 18:00

  • MANNERGAL

    Sat : 21:00

  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00