தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மத்திய- மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேட்டினைக் கண்டித்து போராட்டங்கள் : ஏராளமானோர் பங்கேற்பு

Jun 14 2018 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு இடங்களில், மத்திய- மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேட்டினைக்‍ கண்டித்து, போராட்டங்கள் நடைபெற்றன.

சேலம் பெண்கள் அரசினர் மகளிர் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ப்ளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து, அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்‍கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு எந்த அழைப்பும் வராததால் விரக்தி அடைந்த மாணவிகள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில், கடனை திருப்பி செலுத்த தாமதமானதன் காரணமாக, தனியார் நிதி நிறுவனம் ஒன்று ஆட்களை வைத்து மிரட்டியதால், மனமுடைந்த தம்பதியினர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். 12 மாதங்கள் தவணைத் தொகை செலுத்திய நிலையில், கோவிந்தராஜ் விபத்தில் சிக்‍கி காயமடைந்ததால், ஓராண்டாக பணம் செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவிந்தராஜ் வீட்டிற்கு வந்த அந்நிறுவனத்தின் அடியாட்கள், ஆபாச வார்த்தைகளில் திட்டியதால், மனமுடைந்த கணவன் மனைவி இருவரும், கடிதம் எழுதிவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்‍கப்பட்டுள்ள அவர்களது உடல்களை, உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலைக்கு தூண்டிய நிறுவனத்தின் மீது நடவடிக்‍கை எடுக்‍க அவர்கள் வலியுறுத்தினர்.

ராமேஸ்வரம் தீவு பகுதியில் அமைந்துள்ள இறால் பண்ணைகளை அகற்றக்‍கோரி, கிராமமக்‍கள் காதில் பூ சுற்றி, சங்கு ஊதி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் 60 சதவீதம் குடிநீர் தேவையை, பஞ்சகல்யாணி ஆற்றை சுற்றியுள்ள அரியாங்குண்டு, பேக்‍கரும்பு, குடியிருப்பு, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கிணறு மூலம் தண்ணீர் எடுக்‍கப்பட்டு வருகிறது. ஆனால் இக்‍கிராமங்களில் ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக இறால் பண்ணைகள் அமைத்துள்ளனர். இதனால் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பதோடு, இறால் பண்ணைகளில் இருந்து வெளிவரும் நச்சு கழிவுகளால் குடிநீர் குடிக்‍க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீரை மாசுபடுத்தும் இறால் பண்ணைகளை அகற்ற நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி, 12 கிராமங்களைச் சேர்ந்த 500-க்‍கும் மேற்பட்ட பொதுமக்‍கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ரயில்வே சாலையில், பொதுமக்‍கள் அதிகம் கூடும் இடத்தில் அரசு மதுபானக்‍ கடை அமைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்‍கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ரயில்வே சாலையில் 30 நிமிடங்களுக்‍கு மேலாக கடுமையான போக்‍குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பசுந்தேயிலைக்‍கு குறைந்தபட்சமாக, 50 ரூபாய் விலை நிர்ணயம் செய்யக்‍கோரி, குன்னூர் தென்னிந்திய தேயிலை வாரியம் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் திரு. அய்யாக்‍கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் பறிக்கும் பசுந்தேயிலை கிலோவிற்கு 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரைக்‍கு விலை போகிறது. 4 கிலோ பசுந்தேயிலைக்கு ஒரு கிலோ தேயிலை தூள் கிடைக்கிறது. ஆனால் ஒரு கிலோ தேயிலை தூள் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே மத்திய மாநில அரசுகள், பசுந்தேயிலைக்‍கு குறைந்தபட்சமாக, 50 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்‍கை விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில், உயர்நிலைப்பள்ளி அமைத்திடக் கோரி, மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக கட்டுவதற்கு மறைந்த மாண்புமிகு அம்மா, 110 விதியின் கீழ், 2014-2015 ஆம் கல்வியாண்டில், ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இன்றளவும் கட்டிடம் கட்டுவதற்கு எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாததால் அப்பள்ளியின் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி கட்டடம் அமைத்திடக்கோரி, எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2914.00 Rs. 3117.00
மும்பை Rs. 2936.00 Rs. 3109.00
டெல்லி Rs. 2949.00 Rs. 3123.00
கொல்கத்தா Rs. 2949.00 Rs. 3120.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.90 Rs. 42900.00
மும்பை Rs. 42.90 Rs. 42900.00
டெல்லி Rs. 42.90 Rs. 42900.00
கொல்கத்தா Rs. 42.90 Rs. 42900.00